இந்த நிலையில், விஷம் கலப்பதாக பொய் கருத்து தெரிவித்து தில்லி, ஹரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கேஜரிவால் மீது ஹரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் அவர், தேர்தல் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.
இதனிடையே தில்லியில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
யமுனை நதி விவகாரத்தில் காங்கிரஸ் இளைஞரணியினர், கேஜரிவாலுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

