Last Updated:
வந்தாரா அமைப்பு, கிளிகள் பாதுகாப்பு அமைப்பிற்கு பல்வேறு நிபுண வழிகாட்டுதலையும், முக்கியமான ஆதாரங்களையும் வழங்கி இந்தக் கிளிகளைப் பாதுகாக்க உதவி வருகிறது.
பிரேசில் நாட்டை தோற்றிடமாகக் கொண்ட அரியவகை பறவையான ஸ்பிக்ஸ் மக்காஸ் கிளி இனத்தைச் சேர்ந்தது. சமீபகாலமாக இந்த ஸ்பிக்ஸ் மக்காஸ் அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது. இதனைப் பாதுகாக்கவும், மீள் அமர்வு செய்யவும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வந்தாரா அமைப்பு, அச்சுறுத்தப்பட்ட கிளிகளைப் பாதுகாப்பதற்கான சங்கத்துடன் இணைந்து 41 ஸ்பிக்ஸ் மக்காஸ் கிளிகளை பிரேசில் நாட்டிற்கு கொடுத்துள்ளது.
இந்த 41 ஸ்பிக்ஸ் மக்காஸ் கிளிகளும், ஜெர்மனியின், பெர்லினில் இருக்கும் கிளிகள் பாதுகாப்பு அமைப்பின் இனப்பெருக்க மையத்தில் இருந்து பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வந்தாரா அமைப்பு, கிளிகள் பாதுகாப்பு அமைப்பிற்கு பல்வேறு நிபுண வழிகாட்டுதலையும், முக்கியமான ஆதாரங்களையும் வழங்கி இந்தக் கிளிகளைப் பாதுகாக்க உதவி வருகிறது.
பிரேசிலுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த 41 ஸ்பிக்ஸ் மக்காஸ் கிளிகளில் 23 பெண் கிளிகளும், 15 ஆண் கிளிகளும், பாலினமற்ற மூன்று குஞ்சுகளும் உள்ளன. இந்தக் கிளிகளை பிரேசிலுக்கு அனுப்புவதற்கு முன்பாக ஜெர்மனியில் உள்ள பெர்லினில் 28 நாட்கள் தனி இடத்தில் வைத்து, பிரேசிலின் காட்டுச் சூழலைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நோய்த் தொற்றும் அவைகளில் இல்லை என்பதை கண்காணிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 28-ம் தேதி பெர்லினில் இருந்து 41 கிளிகளும் தனி விமானம் மூலம், பிரேசிலுக்கு அனுப்பப்பட்டன. இந்தக் கிளிகளுடன் இரண்டு கால்நடை மருத்துவர்களும், ஒரு உதவியாளரும் உடன் சென்றனர். பிரேசில் சென்ற கிளிகள் மீண்டும் அங்கு தனி இடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிளிகள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மார்ட்டின் குத், “ஸ்பிக்ஸ் மக்காஸ் மறு அறிமுகம் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஆனந்த் அம்பானி மற்றும் வந்தாரா அமைப்பிற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் தாராளமான நிதியுதவிக்கு மேலதிகமாக, அழிந்து வரும் இந்த காட்டு இனத்தை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதில் வந்தாரா எங்களுடன் பகிர்ந்து கொண்ட நிபுணத்துவம் விலைமதிப்பற்றது. வந்தாராவுடன் இணைந்து முடிந்தவரை அழிந்துவரும் உயிரினங்களை காப்பாற்றும் வகையில் எங்களது பணியை தொடர நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்தார்.
January 30, 2025 7:59 PM IST
பிரேசிலில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஸ்பிக்ஸ் மக்காக்களை பாதுகாக்கும் ரிலையன்ஸின் வந்தாரா அமைப்பு


