• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Rekla Race: ஒரு வண்டி ரெடி பண்ணவே ரூ.2.5 லட்சம்… ஜல்லிக்கட்டுக்கு சற்றும் குறைவில்லாத ரேக்ளா ரேஸ்…

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Rekla Race: ஒரு வண்டி ரெடி பண்ணவே ரூ.2.5 லட்சம்… ஜல்லிக்கட்டுக்கு சற்றும் குறைவில்லாத ரேக்ளா ரேஸ்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போல ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புறங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம் ஆகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு பகுதிகளிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன.

தை மாதம் துவங்கி ஆவணி மாதம் வரை பல இடங்களில் பல்வேறு விதங்களில் ரேக்ளா ரேஸ் நடத்தப்படுகிறது. இதில் சிறிய தட்டு வண்டி, பெரிய தட்டு வண்டி, வில் வண்டி என பல விதங்களில் போட்டியில் நடத்தப்படுகிறது. பாரம்பரியமாகப் பலரும் இந்த ரேக்ளா பந்தயத்திற்காகக் காளைகளைப் பராமரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Anganwadi Teacher: குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிடுவேன்… ஆடிப்பாடி பாடம் நடத்தும் அங்கன்வாடி ஆசிரியர்…

அப்படி ரேக்ளா ரேஸிற்கு வளர்க்கப்படும் காளைகள் குறித்தும், அதன் பராமரிப்பு முறைகள் குறித்தும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரேக்ளா ரேஸில் ஈடுபட்டு வரும் கண்ணன் கூறுகையில், “எனது தந்தையின் 20 வயதில் இருந்தே மாடுகள் வளர்த்து வருகிறார்கள். எனக்குச் சிறு வயதாக இருக்கும் பொழுது எனது வீட்டில் மாடுகள் உண்டு, அவற்றை விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.

மேலும் காளைகளை ரேக்ளா ரேஸிற்கும் பயன்படுத்துகிறோம். இது போக எங்களிடம் ரேஸிற்கு பயன்படுத்தும் வண்டிகளும் விதவிதமாக உள்ளன. ரேஸிற்கு பயன்படுத்தும் விதமாக இரண்டு இரண்டு பல் கன்றுக்குட்டிகள் 6 பல் காளைகள் என பராமரித்து வருகிறோம்.

முன்பெல்லாம் இரண்டு விதங்களில் மட்டுமே ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு வந்தது அதாவது தட்டு வண்டி, வில்வண்டி என்னும் பெயரிலே போட்டிகள் நடைபெற்று வந்தது. தற்போதைய காலகட்டங்களில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இரண்டு பல்லுக்கும் குறைவான சிறிய காளைகளைப் பங்கேற்க வைக்கும் விதமாகச் சிறிய தட்டு வண்டி எனும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: Hero stone: ராஜ உடையில் ஆயுதமேந்திய சிற்பம்… அரிதாகக் காணப்படும் அடுக்கு நிலை நடுகற்கள்…

குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு கிலோ மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதே ரேக்ளா ரேஸ் கொங்கு மண்டலத்தில் மைல் கணக்கிலும் 100 மீட்டர் 200 மீட்டர் கணக்கிலும் போட்டியில் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டுக் காளைகள் ஒரே இடத்தில் நின்று விளையாடுவதால் உடலளவில் பெரிதாகவும் நன்றாக ஜொலிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆனால் ரேக்ளா ரேஸிற்கு பயன்படுத்தும் காளைகள் ஒல்லியாக இருப்பதற்குக் காரணம் நீண்ட தூரம் ஓட வேண்டும் எனும் காரணத்தினால் அந்தக் காளைகள் ஒல்லியாக இருக்கிறது.

ஆனால் காங்கேயம் காளை உடலளவில் பெரியதாக இருந்தாலும் அதன் ஓட்டமும் பயங்கரமாக இருக்கும். எனவே ஓட்டத்திற்கும் காளைகளின் உடல் வாகிற்கும் எந்த ஒரு தொடர்பும் பெரிதாக இல்லை. எனவே தோற்றத்தை வைத்து காளைகளைக் கணிக்க முடியாது அதன் தன்மையைப் பொறுத்துத் தான் அதன் ஓட்டமும் இருக்கும்.

இதையும் படிங்க: Communism Village: போராட்டமும் புரட்சியும் தான் வாழ்வே… கட்சி வெவ்வேறா இருந்தாலும் தத்துவம் கம்யூனிசம் தான்…

பொதுவாக மாடுகளைப் பராமரிப்பவர்கள் அதற்கு அளிக்கும் உணவு வகைகளை வெளியில் கூறுவதில்லை. ரேக்ளா ரேஸுக்கு பயன்படுத்தும் காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு மாடுகளைப் போன்று அனைத்து வகையான உணவுகளையும் கொடுக்கலாம். நாங்கள் முட்டை, பேரீச்சம்பழம், காணும், நிலக்கடலை, கொண்டக்கடலை போன்ற பல்வேறு உணவு வகைகளை நாங்களும் கொடுத்து வருகிறோம்.

ஒரு ஜோடி ரேக்ளா ரேஸ் காளையைப் பராமரிப்பதற்கு மாதம் 30 ஆயிரம் வரை செலவாகும். மேலும் ரேக்ளா ரேஸ் நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே காளைகளைத் தயார்ப்படுத்தி விடலாம்” என அவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Kanniyakumari,Tamil Nadu

First Published :

January 30, 2025 6:41 PM IST

Read More

Previous Post

“நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு” – ப.சிதம்பரம் | former finance minister P Chidambaram slams modi govt

Next Post

வருமான வரியில் மாற்றம் வருமா…?

Next Post
வருமான வரியில் மாற்றம் வருமா…?

வருமான வரியில் மாற்றம் வருமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin