ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தொடர் குற்றவாளிக்கு மார்ச் 21ஆம் தேதி அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Volga Maniac என்று அழைக்கப்படும் ராடிக் டாகிரோவ் 2011 மற்றும் 2012 க்கு இடையில் சுமார் 31 ரஷ்யப் பெண்களை கொன்றதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக அந்த நபரை பிடிக்க காவல்துறையினர் முயற்சி செய்தனர்.
இறுதியாக, 2020 ஆம் ஆண்டு அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலையாளி சில சமயங்களில் பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்று நடித்து பெண்களின் வீட்டுக்குள் நுழைந்து அவர்களை கொன்று அவர்களின் மதிப்புமிக்க பொருட்களை திருடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பெண்களைக் குறிவைத்து தொடர் கொலைகளை செய்து வந்த serial killer!! காவல்துறைக்கே ஆட்டம் காட்டிய நபர்!! சிக்கியது எப்படி? appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin