• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

FDக்கான வட்டி விகிதங்களில் திருத்தம்…! மூத்த குடிமக்களுக்கு 9.3% வட்டி வழங்கும் வங்கி… விவரங்கள் இங்கே!

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
FDக்கான வட்டி விகிதங்களில் திருத்தம்…! மூத்த குடிமக்களுக்கு 9.3% வட்டி வழங்கும் வங்கி… விவரங்கள் இங்கே!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 30, 2025 1:40 PM IST

Fixed deposit | ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில், மூத்த குடிமக்கள் 4 சதவீதம் முதல் 9.3 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறுகின்றனர்.

News18News18
News18

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Shivalik Small Finance Bank) தனது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, தற்போது பொது குடிமக்கள் 3.5 சதவீதம் முதல் 8.80 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறுகின்றனர்.

அதே சமயம், மூத்த குடிமக்கள் 4 சதவீதம் முதல் 9.3 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறுகின்றனர். இந்த புதிய கட்டணங்கள் ஜனவரி 22 முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. FD-ல் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த வட்டி விகிதங்களை சரிபார்க்கலாம். இந்த வங்கியானது 12 மாதங்கள் ஒரு நாள் முதல் 18 மாதங்கள் வரையிலான பொதுமக்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமான 8.8 சதவீதத்தை வழங்குகிறது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு, 9.30 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மற்ற காலங்களுக்கான வட்டி விகிதங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆனது 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலான பொதுமக்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு 4 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான பொது மக்களுக்கு 3.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 4.25 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான பொதுமக்களுக்கு 4.25 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 4.75 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. 91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலான பொதுமக்களுக்கு 4.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பதவிக்காலம் 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான பொதுமக்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. அதே சமயம் 9 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான பொதுமக்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. 12 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்களுக்கு குறைவான காலத்திற்கு, பொது டெபாசிட் செய்பவர்களுக்கு 8.80 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 9.30 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இதையும் படிக்க: உங்களுக்கு குறைவான கிரெடிட் ஸ்கோர் இருக்கா…? தனிநபர் கடனைப் பெற இந்த டிப்ஸ்களை ட்ரை பண்ணிப் பாருங்க…!

18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான, பொது குடிமக்களுக்கு 8.30 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.80 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரையிலான காலத்திற்கு, பொது குடிமக்களுக்கு 7.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 36 மாதங்கள் 1 நாள் முதல் 60 மாதங்கள் வரையிலான காலத்திற்கு, பொதுமக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 60 மாதங்கள் ஒரு நாள் முதல் 120 மாதங்கள் வரையிலான காலத்திற்கு, பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இதையும் படிக்க: தனிநபர் கடன் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க வேண்டுமா…? இதோ உங்களுக்கான டிப்ஸ்…!

டாக்ஸ் சேவர் ஃபிக்ஸட் டெபாசிட் அதாவது 5 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 6.50 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமாகவும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் (SFB) இணையதளத்தின்படி, டெபாசிட் செய்து 7 நாட்கள் கழித்து பணம் எடுத்தால் வட்டி இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

January 30, 2025 1:40 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

FDக்கான வட்டி விகிதங்களில் திருத்தம்…! மூத்த குடிமக்களுக்கு 9.3% வட்டி வழங்கும் வங்கி… விவரங்கள் இங்கே!

Read More

Previous Post

விராட் கோலியை காண டெல்லி மைதானத்தில் திரண்ட ரசிகர்கள்: நெரிசலில் சிக்கி சிலர் காயம் | Stampede scare at Delhi stadium as fans throng to watch Virat Kohli few injured

Next Post

Flight Accident | அமெரிக்க விமான விபத்தில் 64 பேரும் உயிரிழப்பு?

Next Post
Flight Accident | அமெரிக்க விமான விபத்தில் 64 பேரும் உயிரிழப்பு?

Flight Accident | அமெரிக்க விமான விபத்தில் 64 பேரும் உயிரிழப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin