
January 30, 20259:00 AM IST
Tamil Live Breaking News: தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு!
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்த குறிப்பில், வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதே சமயம், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலையில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

