• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் | Death in Maha Kumbh Mela stampede: President Murmu, PM Modi and others condole

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழப்பு: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் | Death in Maha Kumbh Mela stampede: President Murmu, PM Modi and others condole
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மஹாகும்பத்தில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதனுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, நான் முதல்வர் யோகி ஜியுடன் பேசியுள்ளேன், மேலும் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரவுதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜ் மஹாகும்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

மவுனி அமாவாசையை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதில், ஏற்பட்ட கூட்ட நெரசில் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த தகவல் இதுவரை உத்தரப்பிரதேச அரசு அல்லது அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, கும்பமேளாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறுகையில், “அமிர்த குளியல் தொடங்க உள்ளது… அனைத்தும் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும். அனைத்து அகாடக்களுக்கும் அவர்களின் பாரம்பரிய ஊர்வலங்களில் காவல்துறையினரும் பிற அரசு அதிகாரிகளும் உதவுவார்கள். நிலைமை கட்டுக்குள் உள்ளது. இன்று காலை சம்பவத்திற்கான காரணங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் இது நடந்தது. 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தார்.

கும்பமேளாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திவேதி, “கூட்டம் அதிகமாக இருந்ததால் சில பக்தர்கள் காயமடைந்தனர். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த விதமான வதந்திகளுக்கும் கவனம் செலுத்தக்கூடாது. அமிர்த குளியல் விரைவில் தொடங்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல காட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த காட்களில் மக்கள் எளிதாக நீராடுகிறார்கள். உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த தகவல் என்னிடம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வதந்திகளில் கவனம் செலுத்தாமல் பொறுமையுடன் செயல்படுமாறு அனைத்து மதிப்பிற்குரிய துறவிகள், பக்தர்கள், மற்றும் குடிமக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் சேவை செய்ய நிர்வாகம் விடாமுயற்சியுடன் செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அன்பான பக்தர்களே பிரயாக்ராஜுக்கு வாருங்கள், கங்கையில் நீராடுங்கள், சங்கம் காட் முகத்துவாரம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழையுங்கள். சங்கத்தின் அனைத்து காட்களிலும் மக்கள் நிம்மதியாக புனித நீராடி வருகின்றனர். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

நிர்வாக சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தமால் விஐபி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம். மகா கும்பமேளாவுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, இன்னும் பல மகாஸ்நானங்கள் நடக்க உள்ளன. இன்று போன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கம் அமைப்பை பலப்படுத்த வேண்டும்.

விஐபி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும் பொது பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரயாக்ராஜின் புனித தலத்தில் மவுனி அமாவாசையை முன்னிட்டு நடந்த விபத்தில் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் அமைதியைத் தரட்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் பக்தர்களின் வசதியை மிக முக்கியமாகக் கருதி உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், இதனால் எதிர்கால நீராடல் சடங்குகள் அனைத்தும் பாதுகாப்பாக முடிக்கப்படும்.

பல நூற்றாண்டுகள் பழமையான அகாடாக்களின் அரச குளியல் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் பொறுமையுடனும் அமைதியுடனும் நீராடுமாறு கேட்டுக் கொள்கிறேன். கங்கை அன்னை அனைவரையும் காக்கட்டும்.” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகா கும்பமேளாவின் போது, ​​தீர்த்தராஜ் சங்கமக் கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

பக்தர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

அரைகுறை ஏற்பாடுகள், விஐபிகளின் நடமாட்டம், நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தியது, தவறான நிர்வாகம் ஆகியவையே இதற்குக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்தாலும், இதுபோன்ற ஒரு அமைப்பைக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.

இன்னும் பல முக்கிய நீராடல்கள் மீதமுள்ளன. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்போதே விழித்துக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.

பக்தர்களின் தங்குமிடம், உணவு, முதலுதவி மற்றும் நடமாட்டத்திற்கான ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். மேலும் விஐபிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதைத்தான் நமது துறவிகளும், முனிவர்களும் விரும்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

அம்பலமான அநுர அரசின் உள்நோக்கம்: பகிரங்கப்படுத்தும் நாமல்

Next Post

நன்றி மறந்ததா இந்தோனேசியா? – தற்போதைய India–Indonesia உறவு எப்படி இருக்கு?

Next Post
நன்றி மறந்ததா இந்தோனேசியா? – தற்போதைய India–Indonesia உறவு எப்படி இருக்கு?

நன்றி மறந்ததா இந்தோனேசியா? - தற்போதைய India–Indonesia உறவு எப்படி இருக்கு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin