சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் விஜய், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியாக சந்தித்து நியமன ஆணைகளையும் வழங்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் இரண்டாம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

