இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது சந்தர்ப்பம்
ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் செயற்பட்டுள்ளதோடு கடந்த ஆண்டு அமைச்சர் விஜித ஹேரத்தினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தது

அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் பதவி விலகல் செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னதாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் செனேஷ் திஸாநாயக்கவும் பதவி விலகல் செய்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

