• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி தலைமை அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் ராஜினாமா செய்ய முடிவு.. பின்னணியில் பாகிஸ்தான்

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஐசிசி தலைமை அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் ராஜினாமா செய்ய முடிவு.. பின்னணியில் பாகிஸ்தான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 29, 2025 6:54 AM IST

கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்கள் இன்னும் சீரமைக்கப்பட்டு வருவது ஐசிசிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News18News18
News18

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர் குளறுபடிகள் நடந்து வருகின்றன. பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என இந்திய அணி திட்டவட்டமாக தெரிவித்தது.

இதையடுத்து இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன. பிப்ரவரி 19-ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இவர் 2021 நவம்பர் மாதம் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாக செயல்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அவரது ராஜினாமா முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக மைதானங்கள் தயார் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதமே ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கி இருக்க வேண்டும்.

இதையும் படிங்க – ராகுல் டிராவிட் முதல் பும்ரா வரை.. டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி விருது பெற்ற 6 இந்திய வீரர்கள்

ஆனால் மெத்தன போக்கு காரணமாக இன்னும் மைதானங்கள் சரியாக தயாராகவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதான் ஜெஃப் அலர்டிஸ் பதவியை ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்கள் இன்னும் சீரமைக்கப்பட்டு வருவது ஐசிசிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

First Published :

January 29, 2025 6:54 AM IST

Read More

Previous Post

Live : உ.பியில் மகா கும்பமேளாவில் நெரிசல் – உயிரிழப்பு அச்சம்!

Next Post

‘உங்களின் முன்னேற்றத்திற்கு சுய சிந்தனையை நம்புங்கள்’ – மாணவர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

Next Post
‘உங்களின் முன்னேற்றத்திற்கு சுய சிந்தனையை நம்புங்கள்’ – மாணவர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

‘உங்களின் முன்னேற்றத்திற்கு சுய சிந்தனையை நம்புங்கள்’ – மாணவர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin