• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டிரம்ப் உத்தரவால் தேம்பித் தேம்பி அழுத பிரபல பாடகி செலினா கோம்ஸ்.. வீடியோ வெளியிட்டு உருக்கம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
டிரம்ப் உத்தரவால் தேம்பித் தேம்பி அழுத பிரபல பாடகி செலினா கோம்ஸ்.. வீடியோ வெளியிட்டு உருக்கம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றத் தீவிரமும் கடுமையும் காட்டி வருகிறார்.

முதற்கட்டமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்த்தவர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தென் அமெரிக்க நாடான கொலம்பியா, டிரம்ப்பின் 25 சதவீத ஏற்றுமதி வரி உயர்வு, விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி தங்கள் நாட்டு அகதிகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது.

மேலும் பிரேசிலுக்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அகதிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்காமல், விமானத்தில் ஏசி இல்லாமல், கைவிலங்கிட்டு கீழ்த்தரமாக அமெரிக்கா நடத்தியுள்ளது என அந்நாடு குற்றம் சாட்டியது.

ஆனால் எதையும் காதில் வாங்காத அமெரிக்கா, தொடர்ந்து தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்களைக் கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்க குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 956 பேர் வரை கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில்தான் உலகப் புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில், “என் மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள், குழந்தைகள் உட்பட. எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறேன் ” என்று தேம்பித் தேம்பி அழுதபடி வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

நேற்று அவர் வெளியிட்ட இந்த பதிவை சில மணி நேரம் கழித்து அவர் நீக்கிவிட்டார். ஆனால் அவரின் இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. தனது ஆதரவை வெளிப்படையாக கூற கூட உரிமை இல்லாத சூழல் அமெரிக்காவில் வந்துவிட்டது என பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் செலினா தேம்பி அழும் வீடியோவை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முந்தைய காலங்களிலும் செலினா கோம்ஸ் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.

2019 இல் புலம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பற்றி பேசும் ‘லிவ்விங் அண்டாக்குமெண்டட்’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரித்தார். அமெரிக்கரான செலினா கோம்ஸ் உடைய தந்தை மெக்சிகோ நாட்டை சேர்த்தவர், தாய் இத்தாலி நாட்டின் வழி வந்தவர் ஆவார்.



Read More

Previous Post

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யுபிஐ பங்கு 83%-ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல் | UPI Share In India Digital Payments Surged

Next Post

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி

Next Post
விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin