Last Updated:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்திய அணியின் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக பேட்டிங் செய்து 28 பந்துகளில் 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
லியாம் லிவிங்ஸ்டன் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர உதவினார். மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
January 28, 2025 8:39 PM IST


