• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

5 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை தாண்டி சாதனை படைத்த டாடா பஞ்ச்.. அதிகம் விற்பனையாக காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
5 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை தாண்டி சாதனை படைத்த டாடா பஞ்ச்.. அதிகம் விற்பனையாக காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 28, 2025 9:03 PM IST

Punch காரின் விற்பனை அதிகமாக இருக்க முக்கிய காரணம் அதன் மலிவு விலை.

News18News18
News18

உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல மைக்ரோ-எஸ்யூவியான டாடா பஞ்ச் கார் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நிறுவனத்தின் டாடா பஞ்ச் காரானது இந்தியாவில் 5 லட்சம் உற்பத்தி என மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனை மைல்கல்லில் Tata Punch காரின் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வேரியன்ட்ஸ்களின் உற்பத்தி எண்ணிக்கை அடங்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த மாடல் சமீபத்தில் தான் 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான காராக உருவெடுத்தது. இதன் மூலம் நீண்ட ஆண்டுகளாக (சுமார் நான்கு தசாப்தங்களாக) இந்த இடத்தை தக்க வைத்துகொண்டிருந்த மாருதி சுசுகியை, டாடா மோட்டார்ஸ் வீழ்த்தியது.

டாடா பஞ்ச் இவ்வளவு பிரபலமாக விற்பனையாக காரணம் என்ன?

Punch காரின் விற்பனை அதிகமாக இருக்க முக்கிய காரணம் அதன் மலிவு விலை ஆகும். இதுமட்டுமின்றி வாகனத்தில் உள்ள நடைமுறை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றின் கலவையும் இந்த மாடல் விற்பனையில் சக்கை போடு போட காரணமாக உள்ளன. முக்கியமாக இந்த மாடல் ஹை-கிரவுண்ட் கிளியரன்ஸ், காமாண்டிங் டிரைவிங் பொசிஷன்ஸை கொண்டு நகரத்திற்கு ஏற்ற தொகுப்பில் SUV போன்ற அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடலில் டூயல் ஏர்பேக்ஸ், ISOFIX சைல்ட் சீட் மவுண்ட்ஸ், EBD உடன் கூடிய ABS மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது. இந்த அம்சங்கள் கொண்ட பஞ்ச் மாடல் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக 4 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

தவிர பாரத் NCAP தரநிலைகளின் கீழ் சோதிக்கப்பட்ட அனைத்து டாடா வாகனங்களிலும் மிக உயர்ந்த பாதுகாப்பு மதிப்பீட்டை டாடா பஞ்ச் EV பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பல வேரியன்ட்ஸ்களில் Punch மாடலை வழங்குகிறது. பெட்ரோல் மூலம் இயங்கும் வெர்ஷனில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 87.8 PS மற்றும் 115 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் மேனுவல் மற்றும் AMT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு இடையே தேர்வு செய்யலாம்.

இந்த மாடலின் சிஎன்ஜி வெர்ஷனை ரூ.7.29 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி ரூ.9.99 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். பஞ்ச்-இன் பெட்ரோல்-ஒன்லி வேரியன்ட் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.71 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது அதே நேரம் பஞ்ச் EV ரூ.9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில்தொடங்கி ரூ.14.44 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

First Published :

January 28, 2025 9:03 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

5 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை தாண்டி சாதனை படைத்த டாடா பஞ்ச்.. அதிகம் விற்பனையாக காரணம் என்ன?

Read More

Previous Post

5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: இங்கிலாந்து 171 ரன்கள் குவிப்பு | IND vs ENG 3-வது டி20 | varun chakravarthy 5 wicket haul england scores 171 runs third t20i

Next Post

ஈப்போ கவுன்சில் முதலில் ஆய்வு நடத்தட்டும், மதுபான தடை யோசனைகுறித்து பேராக் எம். பி கூறுகிறார் – Malaysiakini

Next Post
ஈப்போ கவுன்சில் முதலில் ஆய்வு நடத்தட்டும், மதுபான தடை யோசனைகுறித்து பேராக் எம். பி கூறுகிறார் – Malaysiakini

ஈப்போ கவுன்சில் முதலில் ஆய்வு நடத்தட்டும், மதுபான தடை யோசனைகுறித்து பேராக் எம். பி கூறுகிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin