• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் முதலீட்டில் எது அதிக வருமானத்தை தரும்?

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் முதலீட்டில் எது அதிக வருமானத்தை தரும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நிலையான சேமிப்புக்கு தபால் அலுவலகம் வழங்கும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் பலர் சேர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சிறுசேமிப்பு முதல் பெரிய முதலீடுகள் வரையிலான பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் தபால் அலுவலகம் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.

சேமிப்பு மற்றும் முதலீடு என்று வரும்போது, ​​தபால் அலுவலகம் இரண்டு பிரபலமான விருப்பங்களை வழங்குகிறது. நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD) மற்றும் ஆபத்து இல்லாமல் வருமானத்தைப் பெற விரும்புபவர்களின் முதல் தேர்வாக இந்த இரு சேமிப்புத் திட்டங்களும் இருந்து வருகின்றன.

நிலையான வைப்புத்தொகை (FD) என்பது, ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்யும் விருப்பமாகும். அதே நேரத்தில் தொடர் வைப்புத் தொகை (RD) என்பது, மக்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் விருப்பத்தை வழங்குகிறது. ஆனால் இந்த இரு திட்டங்களில் செய்யப்படும் முதலீடு மற்றும் கால அளவு, அதன் வருமானத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன. அந்த வகையில், 5 ஆண்டுகளுக்கு ரூ.6 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால், இந்த இரண்டு சேமிப்பு விருப்பங்களில் எது உங்களுக்கு அதிக வருமானத்தை வழங்கும் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை (FD)

தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை என்பது இந்திய அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதில் தனி நபர்கள் ஒரு நிலையான காலத்திற்கு மொத்தமாக ஒரு தொகையை டெபாசிட் செய்யலாம்.

தபால் அலுவலக நிலையான வைப்புத் தொகைகளுக்கான கால அளவு 1 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும். கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கும் இந்த திட்டம், உங்களது முதலீட்டு தொகைக்கு பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், இந்த முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80Cஇன் கீழ் 5 ஆண்டு காலத்திற்கு வரி சேமிப்பு சலுகைகளை பெறலாம். இந்த நிலையான வைப்புத்தொகையில் குறைந்தபட்சமாக ரூ.1,000இல் இருந்து முதலீடு செய்யலாம், அதே நேரத்தில் அதிகபட்ச வரம்பு என்று ஏதும் இல்லை.

வட்டி விகிதங்கள்

1 வருட நிலையான வைப்புத்தொகை: 6.9% வட்டி விகிதம்

2 வருட நிலையான வைப்புத்தொகை: 7.0% வட்டி விகிதம்

3 வருட நிலையான வைப்புத்தொகை: 7.1% வட்டி விகிதம்

5 வருட நிலையான வைப்புத்தொகை: 7.5% வட்டி விகிதம்

நீட்டிப்பு

இந்த நிலையான வைப்புத் தொகை கணக்கை, முதிர்வு தேதியிலிருந்து பின்வரும் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் நீட்டிக்க முடியும். 1 வருட நீட்டிப்புக்கு முதிர்ச்சியடைந்த 6 மாதத்திற்குள்ளும், 2 வருடத்திற்கு முதிர்ச்சியடைந்த 12 மாதத்திற்குள்ளும், 3 அல்லது 5 வருடங்களுக்கு முதிர்ச்சியடைந்த 18 மாதங்களுக்குள் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.

இதையும் படிக்க: எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ்… 5 ஆண்டுகள் FD-க்கு இரண்டில் எது அதிக லாபத்தை வழங்குகிறது தெரியுமா?

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD)

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை என்பது இந்திய அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் ஒரு சிறுசேமிப்புத் திட்டமாகும், இதில் தனிநபர்கள் 1 முதல் 5 ஆண்டுகள் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான மாதாந்திர தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இது ஒரு ஒழுக்கமான சேமிப்பு வழியாகும்.

எந்தவொரு தபால் நிலையத்திலும் சேமிப்புக் கணக்கை திறப்பதன் மூலம் தொடர் வைப்புத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகைக்கு முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகையில் மாதாந்திர டெபாசிட்டுக்கான குறைந்தபட்ச தொகை ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 01.01.2024 முதல், ஆண்டுக்கு 6.7​% (காலாண்டு கூட்டு) வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க: EPFO விதிகளில் ஒரு பெரிய மாற்றம்: உங்கள் PF கணக்கை ஆன்லைனில் புதிய முதலாளிக்கு மாற்றுவது எப்படி…?

தபால் அலுவலக RD கணக்கை யார் திறக்கலாம்?

  • 18 வயதைக் கடந்த தனிநபர்
  • கூட்டுக் கணக்கு (3 பெரியவர்கள் வரை) (கூட்டு A அல்லது கூட்டு B)
  • சிறுவர்களின் சார்பாக ஒரு பாதுகாவலர்
  • மனநிலை சரியில்லாத ஒருவரின் சார்பாக ஒரு பாதுகாவலர்
  • 10 வயதுக்கு மேற்பட்ட மைனர், அவரது பெயரிலேயே திறக்கலாம்

தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை (FD) கணக்கீடு:

கால அளவு: 5 ஆண்டுகள்

மொத்த முதலீட்டுத் தொகை: ரூ.6,00,000

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.5 சதவீதம்

மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.2,69,969

முதிர்வின்போது மொத்த தொகை: ரூ.8,69,969

இதையும் படிக்க: FDக்கு 8%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்கும் 10 இந்திய வங்கிகள்…!

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) கணக்கீடு:

மாதாந்திர முதலீட்டுத் தொகை : ரூ.10,000

கால அளவு: 5 ஆண்டுகள்

மொத்த முதலீட்டுத் தொகை: ரூ.6,00,000

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 6.7%

மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.1,13,659

முதிர்வின்போது மொத்த மதிப்பு: ரூ.7,13,659

First Published :

January 28, 2025 12:34 PM IST

Read More

Previous Post

Ranji Trophy : 25 வயது வீரரின் தலைமையின் கீழ் விளையாடும் கோலி..

Next Post

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு சற்று உயர்வு | Makkal Osai

Next Post
அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு சற்று உயர்வு | Makkal Osai

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு சற்று உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin