• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வைஷாலியுடன் கைகுலுக்காத விவகாரம்: மன்னிப்பு கோரினார் நொடிர்பெக் யாகுபோயெவ் | grandmaster Nodirbek Yakubboev apologizes for Not shaking hands with Vaishali

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
வைஷாலியுடன் கைகுலுக்காத விவகாரம்: மன்னிப்பு கோரினார் நொடிர்பெக் யாகுபோயெவ் | grandmaster Nodirbek Yakubboev apologizes for Not shaking hands with Vaishali
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நொடிர்பெக் யாகுபோயெவ், இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலியுடன் மோதினார்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கைகுலுக்குவதற்காக வைஷாலி தனது கையை நீட்டினார். ஆனால் நொடிர்பெக் யாகுபோயெவ், அதற்கு எந்தவித வினையாற்றாமல் விளையாட தொடங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் நொடிர்பெக் யாகுபோயெவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வைஷாலியுடனான ஆட்டத்தில் நடந்த சூழ்நிலையை நான் விளக்க விரும்புகிறேன். பெண்கள் மற்றும் இந்திய செஸ் வீரர்களை நான் மதிக்கிறேன். மத காரணங்களுக்காகவே நான் மற்ற பெண்களை தொடுவதில்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

வைஷாலியையும் அவரது சகோதரரையும் இந்தியாவின் வலிமையான செஸ் வீரர்களாக நான் மதிக்கிறேன். எனது நடத்தையால் நான், அவரை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். எதிர் பாலினத்தவருடன் கைகுலுக்க வேண்டாம் என்றோ, பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டும் என்றோ நான் மற்றவர்களை வற்புறுத்தவில்லை.

ருமேனியா வீராங்கனை இரினா புல்மாகாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னர், அவரிடம் எனது மத நம்பிக்கை குறித்து தெரிவித்திருந்தேன். அதை அவர், ஏற்றுக்கொண்டார். ஆனால் போட்டி நடைபெற்ற இடத்துக்கு நான் வந்தபோது, சைகையிலாவது நமஸ்தே செய்ய வேண்டும் என்று நடுவர்கள் என்னிடம் கூறினர். திவ்யா மற்றும் வைஷாலியுடனான ஆட்டங்களில் நான் அதைப் பற்றி விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு அவர்களிடம் சொல்ல முடியவில்லை, ஒரு சங்கடமான சூழ்நிலை இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்.வைஷாலிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், தோல்வியை சந்தித்தார். போட்டி முடிவடைந்ததும் வைஷாலி கைகுலுக்காமல் எழுந்து சென்றார்.



Read More

Previous Post

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு | Infosys co-founder Kris Gopalakrishnan among 18 booked under SC/ST Atrocities Act

Next Post

இந்த 2 எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்..!

Next Post
இந்த 2 எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்..!

இந்த 2 எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin