21 பாட்டாளிகள் உயிர்த்தியாகம்!
தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1980&ஆம் ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து பத்தாண்டுகள் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு கட்டமாக 1987&ஆம் ஆண்டு செப்டம்பர் 17&ஆம் நாள் முதல் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் உயிர்த் தியாகம் செய்தனர்.

