• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்! | Padma Bhushan award to 19 people including Ajith kumar, Shobana, Nalli Kuppusamy

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்! | Padma Bhushan award to 19 people including Ajith kumar, Shobana, Nalli Kuppusamy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில், தெலங்கானாவை சேர்ந்த துவ்வுர் நாகேஷ்வர ரெட்டி (மருத்துவம்), சண்டிகர் நீதிபதி (ஓய்வு) ஜெகதிஷ் சிங் கேஹர், குஜராத்தின் குமுதினி ரஜினிகாந்த் லகியா, கர்நாடகாவின் லட்சுமிநாராயண சுப்ரமணியம், கேரளாவின் எம்.டி. வாசுதேவன் நாயர் (மறைவு), சுசுகி மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மறைந்த ஓசாமு சுசுகி, பிஹாரின் ஷார்தா சின்ஹா (மறைவு) ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுபோல, தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பட்டியலில் 23 பெண்கள், 10 வெளிநாட்டினர் இடம்பெற்றுள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த தவில் கலைஞர் பி.தட்சிணாமூர்த்தி, அமெரிக்க மென்பொறியாளர் சேதுராமன் பஞ்சநாதன், ஹரியானாவை சேர்ந்த பாரா வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் (33), கோவாவில் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த லிபியா லோபோ சர்தேசாய் (100), டெல்லியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நீரஜா பாட்டியா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தக் இசைக் கலைஞர் கோகுல் சந்திரதாஸ் (57), நாகாலாந்தை சேர்ந்த பழ விவசாயி எல்.ஹாங்திங் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல பிரேசிலை சேர்ந்த இந்து ஆன்மிக தலைவர் ஜோனஸ் மசெட்டி, குவைத்தை சேர்ந்த ஷீகா ஷேகா அலி அல் ஜபர் அல்-சபாவும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். உத்தரா கண்டை சேர்ந்தவர்களும் இந்தியாவின் பாரம்பரியம் பற்றி எழுதி புகழ்பெற்றவர்களுமான மறைந்த ஹக் மற்றும் கொலீன் கான்ட்சர் தம்பதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்குவார்.



Read More

Previous Post

Tamilmirror Online || மோடி- இந்தோனேசிய ஜனாதிபதி சந்திப்பு

Next Post

திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி! | tilak varma one man show team india beats england

Next Post
திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி! | tilak varma one man show team india beats england

திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி! | tilak varma one man show team india beats england

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin