• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி பட்டம் வென்றார் மேடிசன் | Australian Open Tennis Madison keys beats aryna Sabalenka to win title

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி பட்டம் வென்றார் மேடிசன் | Australian Open Tennis Madison keys beats aryna Sabalenka to win title
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இரு முறை சாம்பியனான அரினா சபலென்காவை வீழ்த்தி பட்டம் வென்றார் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா,19-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதினார்.

இதில் 32 வயதான மேடிசன் கீஸ் 6-3, 2-6, 7-5 என்ற செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். கடைசியாக அவர், 2017-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் கடைசி கடந்த 2023மற்றும் 2024-ம் ஆண்டுகளில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறையும் பட்டம் வென்று மார்ட்டினா ஹிங்கிஸின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் அரினா சபலென்கா இருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேடிசன் கீஸ். மார்ட்டினா ஹிங்கிஸ் 1997, 1998, 1999-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 முறை ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடியிருந்தார். தனது 32-வது வயதில் முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரில் மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.



Read More

Previous Post

Vengaivayal Case: ’வேங்கைவயல் விவகாரம்! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்! அரசிடம் பதில் உண்டா?’

Next Post

எனது கவனம் எல்லாம் இசையிலே.. இப்போது வேதனையாக இருக்கிறது- இளையராஜா உருக்கம் | Makkal Osai

Next Post
எனது கவனம் எல்லாம் இசையிலே.. இப்போது வேதனையாக இருக்கிறது- இளையராஜா உருக்கம் | Makkal Osai

எனது கவனம் எல்லாம் இசையிலே.. இப்போது வேதனையாக இருக்கிறது- இளையராஜா உருக்கம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin