• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின | Indonesian President meets PM Modi

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின | Indonesian President meets PM Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 23-ம் தேதி இரவு டெல்லி வந்தார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை, அவர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுக்கு நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி அவரை வரவேற்றனர். இதன்பிறகு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில்பிரதமர் நரேந்திர மோடியை இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, கடல் சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, பின்டெக், செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இரு தலைவர்களும் இணைந்து நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டில் இந்தோனேசியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டேன். அப்போது இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உறுதி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்படும். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா, இந்தோனேசியா இடையே 30 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 75-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்கிறார். இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கூறியதாவது: இந்தோனேசியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. எங்கள் நாட்டின் சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. அந்த நன்றியை ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்த இந்த நேரத்தில் உறுதியேற்கிறேன். இவ்வாறு பிரபோவா சுபியாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம் – மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தோனேசியா, சீனா இடையே உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு தென்சீனக் கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்துக்கு சீனா இடையூறாக இருக்கிறது. இதன்காரணமாக இந்தியாவுடன் இந்தோனேசியா இணக்கமாக செயல்படுகிறது. சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகள் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கி உள்ளன. இந்த பட்டியலில் இந்தோனேசியாவும் இணைகிறது. விரைவில் இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யப்படும். உள்நாட்டு போரில் சிக்கித் தவிக்கும் மியான்மரில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவும் இந்தோனேசியாவும் விரும்புகின்றன. இதுதொடர்பாகவும் இரு நாடுகளின் தலைவர்கள் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளனர். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்து கோயிலை புனரமைக்கும் இந்தியா: இந்தோனேசியாவில் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனினும் அந்த நாட்டில் 8, 9, 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஏராளமான இந்து கோயில்கள் உள்ளன. இதில் இந்தோனேசியாவின் யாவாப் பகுதியில் அமைந்துள்ள பிரம்பானான் கோயில் முக்கியமானது. இது 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கம்போடியாவின் அங்கோர் வாட் கோயிலுக்கு அடுத்து தென்கிழக்கு ஆசியாவின் 2-வது பெரிய கோயில் ஆகும். இந்த கோயில் யுனெஸ்கோ அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.

முதலில் சிவனுக்காக கோயில் கட்டப்பட்டு உள்ளது. பின்னர் அங்கு திருமால், பிரம்மனுக்கும் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது பிரம்பானான் கோயில் மும்மூர்த்திகள் கோயிலாக விளங்குகிறது. பல்வேறு பெரிய பூகம்பங்களுக்கு பிறகும் கோயில் இன்றளவும் நிலைத்திருக்கிறது. பலமுறை கோயில் புனரமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, 40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பிரம்பானான் கோயிலை புனரமைக்க மத்திய அரசின் உதவியை கோரி உள்ளார். இதுதொடர்பாக இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.



Read More

Previous Post

மது போதையில் வயோதிபப் பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார்

Next Post

2024-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு | Arshdeep Singh named T20I Player of the Year 2024

Next Post
2024-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு | Arshdeep Singh named T20I Player of the Year 2024

2024-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அர்ஷ்தீப் சிங் தேர்வு | Arshdeep Singh named T20I Player of the Year 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin