உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்
மாத்தறை(matara) பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

