• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காஞ்சிபுரம் ஜரிகை ஆலை பொலிவுடன் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம் | minister gandhi says lace mill functioning excellent in kanchipuram

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
காஞ்சிபுரம் ஜரிகை ஆலை பொலிவுடன் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம் | minister gandhi says lace mill functioning excellent in kanchipuram
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காஞ்​சிபுரத்​தில் இயங்​கும் தமிழ்​நாடு ஜரிகை ஆலை பொலிவுடன் சிறப்பாக செயல்​பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி தெரி​வித்​துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஜன.22-ம்தேதி​யிட்ட இதழில் பொலிவை இழக்​கும் ஜரிகை உற்பத்தி: ஆலையை மீட்க என்ன வழி? என்ற தலைப்​பில் செய்தி வெளி​யாகி இருந்​தது. அது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி அளித்​துள்ள விளக்க கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்​சிபுரத்​தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்​யப்​படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்​கப்​படு​கிறது. இதன் விலை நாள் தோறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை​யில் ஏற்படும் மாற்​றத்​துக்​கேற்ப விலை நிர்​ணயம் செய்​யப்​பட்டு வருகிறது.

பத்திரிகை செய்தி​யில் இடம்​பெற்றுள்ள ‘வளர்ந்து வரும் தொழில்​நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்பு​களுக்கு ஏற்ப இந்த ஆலை மேம்​படுத்​தப்​பட​வில்லை’ என்ற குற்​றச்​சாட்டு உண்மைக்கு புறம்​பானது. ஜரிகை ஆலையில் மொத்தம் 6 தங்க முலாம் பூசும் இயந்​திரங்கள் நிறு​வப்​பட்​டுள்ளன. ஆலையின் உற்பத்தி திறனை பெருக்க, இந்த அரசு பொறுப்​பேற்ற பின்னர், மேம்​படுத்​தப்​பட்ட தொழில்​நுட்​பத்​துடன் கூடிய 3 நவீன இயந்​திரங்கள் வாங்​கப்​பட்​டுள்ளன.

கடந்த 4 ஆண்டு​களில் தங்கம் விலை 38.24 சதவீதம், வெள்ளி விலை 34.28 சதவீதம் உயர்ந்​துள்ளது. அதனால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்​களின் ஜரிகை கொள்​முதல் குறைந்​துள்ளது. ஜரிகை விலை உயர்​வால், நெசவாளர்கள் உற்பத்தி செய்​யும் பட்டு சேலை விலை உயர்ந்து, அதன் மூலம் பட்டு சேலை விற்பனை நாளடை​வில் குறைந்து வருகிறது. ஆலையில் ஆரம்ப காலம் முதல் தங்க​முலாம் பூச்சு பிரி​வில், தேவையான ரசாயனங்கள் சூரத் விற்​பனை​யாளர்​களிட​மிருந்து பெறப்​பட்​டது.

இத்தொழில்​நுட்​பத்​துக்கு சூரத் விற்​பனை​யாளர்​களையே முழு​வதுமாக சார்ந்​திருப்பதை தவிர்க்க அண்ணா பல்கலைக்கழக டெக்ஸ்​டைல் தொழில்​நுட்ப வல்லுநர்கள் உதவி​யுடன் தங்க முலாம் பூச்சு பிரிவுக்கு தேவையான ரசாயனங்கள் ஆலையிலேயே தயாரித்து தன்னிறைவு பெற்றுள்​ளது. பட்டு நூலுக்கு 15 சதவீதம் அரசு மானியம் வழங்​குவது போல், ஜரிகை மார்க்கொள்​முதல் செய்​யும்​போது, தேசிய கைத்தறி வளர்ச்சி திட்​டத்​தின் கீழ் 15 சதவீத மானியம் வழங்க, மத்திய அரசுக்கு முன்​மொழிவு சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால் மத்திய அரசால் கொள்கை அளவில் ஏற்றுக்​கொள்​ளப்​பட​வில்லை.

இந்த அரசு பொறுப்​பேற்​றவுடன் ஆலையில் பணிபுரி​யும் தொழிலா​ளர்​களுக்கு 2023-ம் ஆண்டு நவ.24 முதல் ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே ஆண்டு டிச.28-ம் தேதி ரூ.1.41 கோடி​யில் புனரமைக்​கப்​பட்ட ஆலை திறக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த அரசு ​முன்னெடுத்து செயல்​படுத்​தப்​பட்ட பல்​வேறு நட​வடிக்கைகளால் தமிழ்​நாடு ஜரிகை ஆலை, பொலிவுடன் சிறப்பாக செயல்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு கடிதத்​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

Ranji Trophy: மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜம்மு காஷ்மீர் அணி.. ரஞ்சி டிராபியில் நடந்த அதிரடி

Next Post

Mumbai Attack: குற்றவாளி ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம்… அமெரிக்க நீதிமன்றம் அனுமதி | US court allows extradition of Mumbai attack convict Rana to India

Next Post
Mumbai Attack: குற்றவாளி ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம்… அமெரிக்க நீதிமன்றம் அனுமதி | US court allows extradition of Mumbai attack convict Rana to India

Mumbai Attack: குற்றவாளி ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம்... அமெரிக்க நீதிமன்றம் அனுமதி | US court allows extradition of Mumbai attack convict Rana to India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin