இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (27) நாட்டை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (Sri Lanka State Trading Corporation) அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவிக்கையில் (Ravindra Fernando),
இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது.
உப்பு இறக்குமதிக்கு அனுமதி
இந்த நிலையில், முதலாவது தொகுதி திங்கட்கிழமை நாட்டை வந்தடையும்.

நாட்டில் நிலவும் உப்பு தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த பருவ மழையினால் உப்பை உற்பத்தி செய்வதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

