
Last Updated:
உலகின் உயரமான செனாப் ரயில்வே பாலத்தில், வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் இந்த ரயில், 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் உயரமான ரயில்வே பாலத்தில், வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில், ஒற்றை வளைவு ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் குளிர்சியான சூழலுக்கு ஏற்ப, இந்த வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளன
January 25, 2025 1:23 PM IST

