ிறம் Gender Identity “பாலின அடையாளம்” என்ற சொல் முதன்முதலில் 1960-களில் தோன்றியது. ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ சமூகத்தால் வகைப்படுத்தப்பட்ட நபர், தன் உள்ளுணர்வின் அடிப்படையில், தன்னை யாராகக் கருதுகிறார் என்ற அடிப்படையில் இந்த வார்த்தைப் பிரயோகம் கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில், இந்த சொல், பல்வேறு வகையில் தன்னை அடையாளம் காணும் நபர்களையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கிறது.
Women”s Health Research நிறுவனரும், உளவியல் மருத்துவருமான கரோலின் எம். மஸூர் (Carolyn M. Mazure), “Sex (பால்) என்பதற்கும் Gender (பாலினம்) என்பதற்கு வித்தியாசம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இரண்டுக்கும் ஒரே பொருள் என்றே கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல. ஒரு குழந்தை பிறக்கும் போது, அதன் உயிரியல் அடிப்படையில் அதை ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ இந்த முடிவு செய்யப்படுகிறது. இதைக் குறிப்பிடும் இடத்தில் Sex என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
Gender என்ற வார்த்தை அந்தக் குழந்தை வளர்ந்து வரும்போது, அவர் தன்னை என்னவாக உணர்கிறார் என்பதைப் பொறுத்து Gender தீர்மானிக்கப்படுகிறது. அப்போதுதான் தன்னுடைய விருப்ப Gender-ஐ உடை, நடை, பாவனைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். அது சார்ந்துதான் அவர்களின் இணைத்தேர்வும் இருக்கும்.” எனக் குறிப்பிடுகிறார்.

