• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எச்1-பி விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய முடிவு… என்ன தெரியுமா..!

GenevaTimes by GenevaTimes
January 23, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
எச்1-பி விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய முடிவு… என்ன தெரியுமா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 23, 2025 12:10 PM IST

H1-B Visa | H1-B விசாக்கள் வழக்கம் போல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவுப்படுத்தி உள்ளார். திறமை உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News18

திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

எச்1-பி விசா

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், நிர்வாகம் தொடர்பான முடிவுகளை வேகமாக எடுத்து வருகிறார். அதிபராக பதவியேற்ற இரண்டே நாட்களில் டிரம்ப் பல முக்கிய முடிவுகளை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேர்தல் பரப்புரையில் இருந்தே, வெளியுறவுக் கொள்கை மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்து வந்தார் ட்ரம்ப்.

இது புலம்பெயர்ந்தோர் மற்றும் விசா கொள்கைகள் எவ்வாறு கையாளப்படும் என்பது பற்றிய கவலையை எழுப்பியது. இந்த நிலையில், எச்-1பி விசாக்கள் தொடரும் என்று டிரம்ப் உறுதியளித்து உள்ளார். வெள்ளை மாளிகையில், சாஃப்ட்பேங்க் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கூட்டாக செய்தியாளர்கள சந்தித்த அவர் இதன் தெரிவித்தார்.

Also Read: பதவியேற்ற முதல்நாளே ரஷ்யாவுக்கு வார்னிங்.. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பு

எச்-1பி விசா : ட்ரம்பின் நிலைப்பாடு

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதனால் எச்1-பி விசாவில் அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்புகள் குறையும் என்ற கவலை பலருக்கு எழுந்தது. ஆனால், எச்1-பி விசா குறித்து டிரம்ப் சற்று சாதகமாக பதிலளித்துள்ளார். அது என்னவென்றால், எச்1-பி விசாக்கள் வழக்கம் போல் தொடரும் என்றும், திறமை உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“முக்கியப் பங்கு வகிக்கின்றனர்”

மேலும், அமெரிக்காவை வளப்படுத்துவதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது என்றார். பணியாளர் முதல் பொறியாளர் வரை, திறமை உள்ளவர்கள் அமெரிக்காவிற்கு வரலாம் என்று ட்ரம்ப் தெளிவுபடுத்தினார். எனினும், இது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை குறைக்கிறது என்ற வாதத்தை தானும் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். இருப்பினும், திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு தொடர்ந்து வருவார்கள் என்றார். டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் உள்ளிட்டோர் H-1B விசா திட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

First Published :

January 23, 2025 12:10 PM IST

Read More

Previous Post

Union Budget 2025 | வட்டி மானியம், ஏஐ தொழில்நுட்பம்… மத்திய பட்ஜெட்டில் ஜவுளி உற்பத்தியாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

Next Post

காரியத்தடை நீக்கும் முருகர் மந்திரம் | Makkal Osai

Next Post
காரியத்தடை நீக்கும் முருகர் மந்திரம் | Makkal Osai

காரியத்தடை நீக்கும் முருகர் மந்திரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin