• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கா? – 2025 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு | Income up to Rs 10 lakh to be tax free in Budget 2025 says report

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கா? – 2025 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு | Income up to Rs 10 lakh to be tax free in Budget 2025 says report
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரி விதிப்பை 30%-ல் இருந்து 25% ஆக குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எத்தகைய அறிவிப்புகள் வரலாம் என்பது தொடர்பாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, “ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நிதித்துறை வட்டாரங்கள், ‘ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிப்பது மற்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு புதிதாக 25% வரி விதிப்பு அறிமுகப்படுத்துவது என இரண்டு வாய்ப்புகளையும் நாங்கள் மதிப்பீடு செய்கிறோம்.

பட்ஜெட் அனுமதித்தால் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு, ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25 சதவீத வரி விதிப்பு ஆகிய இரண்டும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஏற்படும் ரூ.50,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரையிலான வருவாய் இழப்பை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது’ என தெரிவித்துள்ளன.

தற்போது உள்ள ​​புதிய வரி விதிப்பு நடைமுறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு எந்த வரியும் இல்லை. ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர், அதிகபட்ச வரி அடுக்கான 30%-ன் கீழ் வருகிறார்கள்.

உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (GTRI) எனும் நிதிசார் சிந்தனையாளர்கள் அமைப்பு, 2025-26 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக குறிப்பிடத்தக்க வரி சீர்திருத்தங்களை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பணவீக்கத்துக்கு ஏற்ப வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5.7 லட்சமாக உயர்த்த GTRI பரிந்துரைத்தது. 2025-ம் ஆண்டுக்குள் சேமிப்பு வட்டிக்கு ரூ.10,000 வரை விலக்கு இருப்பதை, ரூ.19,450 ஆக உயர்த்த வேண்டும் என்றும், காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் PF பங்களிப்புகளுக்கு ரூ.1.5 லட்சம் விலக்கு உள்ளதை ரூ.2.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளையும் GTRI முன்மொழிந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.



Read More

Previous Post

IND vs ENG 1st T20: ஷமிக்கு ஓய்வு.. வெற்றி காம்பினேஷனுடன் களமிறங்கும் சூர்யா – இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி அணி

Next Post

எலான் மஸ்க்கால் ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு… மகிழ்ச்சியில் இந்தியர்கள்

Next Post
எலான் மஸ்க்கால் ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு… மகிழ்ச்சியில் இந்தியர்கள்

எலான் மஸ்க்கால் ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு... மகிழ்ச்சியில் இந்தியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin