• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்.. வருடாந்திர கட்டணங்களை தவிர்க்க உதவும் 3 எளிய வழிகள் இதோ! 

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்.. வருடாந்திர கட்டணங்களை தவிர்க்க உதவும் 3 எளிய வழிகள் இதோ! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்த காலக்கெடுவிற்குள் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில், நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டி இருக்கும். மேலும், பேமெண்ட் நாளுக்கு முன்பாகவே நிலுவைத் தொகையைச் செலுத்தினால், எந்த வட்டியும் விதிக்கப்படாது. கூடுதலாக, பல கிரெடிட் கார்டுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் வருகின்றன, இது அவற்றின் பிரபலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.

அனைத்து வங்கிகளுமே, அதன் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் என குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன. அதே நேரத்தில் ஆண்டு கட்டணமில்லா இலவச கார்டுகளும் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் கார்டுகளில் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில், வருடாந்திர கட்டணத்தில் இருந்து அவர்களுக்கு விலக்கும் அளிக்கப்படுகிறது.

இவ்வாறாக, கட்டணமில்லா கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது அல்லது கட்டணமில்லா கிரெடிட் கார்டை மிகவும் செலவு குறைந்ததாக மாற்றுவதற்கான எளிதான வழிகளைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

சரியான கார்டைத் தேர்ந்தெடுத்தல்: அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் வருடாந்திர கட்டணங்கள் விதிக்கப்படுவதில்லை. அதிலும், தற்போதைய காலகட்டத்தில் பல வங்கிகள் மற்றும் கடன் வழங்குநர்கள் வாழ்நாள் முழுவதும் கட்டணம் இல்லா இலவச கார்டுகளை வழங்கி வருகிறார்கள். அதே நேரத்தில், கட்டணம் செலுத்த வேண்டிய கார்டைப் பயன்படுத்தி நீங்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்வதன் மூலம், கட்டண தள்ளுபடியையும் பெறலாம்.

எனவே, உங்களது செலவுகளுக்கு ஏற்ற சரியான மற்றும் நல்ல சலுகைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்வது நல்லது.

ரிவார்டு பாய்ண்டுகளைப் பயன்படுத்துதல்: சில நேரங்களில், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தி, ஒரு நல்ல லோன் வரலாற்றைக் கொண்ட வாடிக்கையாளராக இருந்தால், நல்லெண்ண அடிப்படையில் வங்கிகள் உங்களது வருடாந்திர கட்டணத்தைத் தாமாகவே தள்ளுபடி செய்யலாம். மேலும், இந்த வருடாந்திர கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய நீங்களும், உங்களது வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

மேலும், சில கிரெடிட் கார்டுகள் செலவழிக்கப்படும் தொகைக்கு ஏற்ப ரிவார்டு பாயிண்டுகளை வழங்கும். இந்த ரிவார்டு பாயிண்டுகளைப் பயன்படுத்தியும் வருடாந்திர கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய முடியும்.

குறிப்பிட்ட தொகையைச் செலவிடுதல்: ஒரு வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்தால், பல கிரெடிட் கார்டு வழங்குநர்கள் வருடாந்திர கட்டணங்களைத் தள்ளுபடி செய்கின்றன.

எனவே, நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டு, உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு இல்லை என்றால், அதிக நன்மைகள் அல்லது ரிவார்டு பாயிண்ட்களை வழங்கும் மற்றும் குறைந்த வருடாந்திர கட்டணங்களைக் கொண்ட கிரெடிட் கார்டை வாங்குவது சிறந்தது.

இவ்வாறாக, கிரெடிட் கார்டின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, செலவுகளை அதிகப்படுத்தி நிதி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

First Published :

January 22, 2025 5:55 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்.. வருடாந்திர கட்டணங்களை தவிர்க்க உதவும் 3 எளிய வழிகள் இதோ! 

Read More

Previous Post

தை அமாவாசை: மகா கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரயில்கள்!

Next Post

என்ன பயம்? ஊழலைதானே எதிர்கிறோம்

Next Post
என்ன பயம்? ஊழலைதானே எதிர்கிறோம்

என்ன பயம்? ஊழலைதானே எதிர்கிறோம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin