கோலாலம்பூர்:
இன்று முதல் ரஹ்மா உதவித் தொகையின் முதல் கட்டம் விநியோகிக்கப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உதவித் தொகை திட்டத்திற்கு அரசாங்கம் 2.3 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், இதனால் 8.3 மில்லியன் பேர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
மக்களின் வாழ்க்கை சுமையை கருத்தில் கொண்டு, இந்த உதவித் தொகை திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2.1 பில்லியன் ரிங்கிட்டை விட, தற்போது கூடுதலான தொகை ஒதுக்கப்பட்டதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The post ரஹ்மா நன்கொடை விநியோகம் ; கட்டம் 1 இன்று ஆரம்பம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

