• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘பிறப்புரிமையால் இனி குடியுரிமை இல்லை’ – ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எத்தகைய பாதிப்பு? | Donald Trump ends birthright citizenship and How will it affect Indians in US explained

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
‘பிறப்புரிமையால் இனி குடியுரிமை இல்லை’ – ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எத்தகைய பாதிப்பு? | Donald Trump ends birthright citizenship and How will it affect Indians in US explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருப்பது, அந்நாட்டில் வசிக்கும் இந்தியா உள்பட பல வெளிநாட்டவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க அரசியல் சாசனத்தில் 1868-ல் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை தொடர்பான 14-வது திருத்தத்தத்தின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர்கள். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அமெரிக்கராக இல்லாவிட்டாலும்கூட, அந்தக் குழந்தைக்கு குடியுரிமை உண்டு. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலம் குறித்து சட்ட ரீதியாக தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எழுந்ததை அடுத்து இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக, பதவியேற்ற முதல் நாளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த உத்தரவு, அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிப்பதாகவும், இந்த முடிவு அமெரிக்காவில் தற்காலிக விசாக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், ட்ரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட சில மணிநேரங்களில், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ட்ரம்ப்பின் இந்த உத்தரவு, அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின்படியே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள், நாட்டின் குடியுரிமையைப் பெறக்கூடியவர்கள் என கூறப்படவில்லை என்றும், “இது அதிகார வரம்புக்கு உட்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுக்கும் சட்ட நிபுணர்கள், அதேநேரத்தில், 14-வது சட்டத் திருத்தத்தின் மொழி விளக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்? – சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 54 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் தோராயமாக 1.47% ஆகும். குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.

ட்ரம்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்காலிக வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி, இயல்பாக குடியுரிமை பெற மாட்டார்கள்.

அமெரிக்க குடியுரிமைக்காகவே பலர் சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வது அதிகம் என கூறப்படுகிறது. குறிப்பாக, மெக்சிகோ நாட்டவர்களும் இந்தியர்களுமே அதிக அளவில் இவ்வாறு சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது.



Read More

Previous Post

அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் தயார்: பிரியங்கா காந்தி

Next Post

மாலில் இருந்து பெண்ணை கடத்த முயற்சித்த எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரணை

Next Post
மாலில் இருந்து பெண்ணை கடத்த முயற்சித்த எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரணை

மாலில் இருந்து பெண்ணை கடத்த முயற்சித்த எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin