• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் | jannik sinner iga swiatek advanced to quarter finals in australian open tennis

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக் | jannik sinner iga swiatek advanced to quarter finals in australian open tennis
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெர்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

மெர்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 13-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனேவுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

21-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன், 41-ம் நிலை வீரரான பிரான்ஸின் கேல் மோன்பில்ஸை எதிர்த்து விளையாடினார். இதில் பென் ஷெல்டன் 7-6 (7-3), 6-7 (3-7), 7-6 (7-2), 1-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது கேல் மோன்பில்ஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் பென் ஷெல்டன் கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.

55-ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ சோனேகோ 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் 121-ம் நிலை வீரரான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-0, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் இவா லைஸையும், 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 6-4, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கசட்கினாவையும், 28-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

6-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 3-6, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸிடம் தோல்வி அடைந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.



Read More

Previous Post

4 ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைவு!

Next Post

மீனவர் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்… ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்..

Next Post
மீனவர் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்… ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்..

மீனவர் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்... ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin