பொன்முடி பதவி ஏற்பு
உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொன்முடிக்கு இன்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

