• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர்: இலக்குகளை வெற்றிகரமாக துரத்திய எம்ஐ கேப்டவுன் | sa20 cricket mi cape town chase own target

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர்: இலக்குகளை வெற்றிகரமாக துரத்திய எம்ஐ கேப்டவுன் | sa20 cricket mi cape town chase own target
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேப்டவுன்: பெட்வே எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் – ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 38 பந்துகளில் 61 ரன்கள் (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) விளாசினார். டேவன் கான்வே 31 பந்துகளில், 35 ரன்கள் சேர்த்தார். ஜானி பேர்ஸ்டோ 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த எம்ஐ கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன், ராஸ்ஸி வான் டெர் டசென் ஜோடி அற்புதமான தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவர்களில் 70 ரன்கள் குவித்தது. ராசி வான் டெர் டசென் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ரியான் ரிக்கெல்டன் 39 பந்துகளில், 89 ரன்கள் (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ரியான் ரிக்கெல்டன், ஹென்ட்ரிக்ஸ் ஜோடி 49 பந்துகளில், 92 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் எம்ஐ கேப்டவுன் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் போனஸ் புள்ளியையும் தன்வசப்படுத்தியது. ஹென்ட்ரிக்ஸ் 34 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.



Read More

Previous Post

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது | Three Israeli hostages freed by Hamas as ceasefire begins

Next Post

வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

Next Post
வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin