தமிழ்நாடு பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாவட்ட தலைவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவர்களுக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவின் மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியை கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தை கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

