• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி; தண்டனை விவரம் எப்போது?

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி; தண்டனை விவரம் எப்போது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இதனையடுத்து அங்கு விரைந்த மேற்குவங்க காவல்துறையினர், அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியது. மேலும், கொல்லப்பட்டு கிடந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகியிருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டு போராட்டங்களும் நடந்தன.

இதற்கிடையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட 9-ம் தேதியே குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர் தான் குற்றத்தை செய்தார் என்பதற்கு ஆதாரமாக செமினார் ஹாலில் இருந்த உடைந்த ப்ளூடூத்தை போலீஸார் காண்பித்தனர். அந்த ப்ளூடூத் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் போனோடு இணைந்திருந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுகந்த் மஜும்தார் தெரிவித்திருந்தார். அதேபோல், இறந்த பெண்ணின் பெற்றோரும் சுதந்திரமான விசாரணை வேண்டும் என மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ வாசம் ஒப்படைத்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சீல்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சஞ்சய் ராய்க்கு எதிரான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

அதன்படி, 45 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில், பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் கூட்டு பாலியல் வன்கொடுமை என்று இல்லை. சஞ்சய் ராய் மட்டுமே தனியாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். குற்றம் நடந்த அந்த சமயத்தில் அவர் போதையில் இருந்துள்ளார்.

சி.சி.டி.வி. காட்சியில் 9-ம் தேதி சஞ்சய் ராய் செமினார் ஹாலில் காலை 4 மணிக்கு உள்ளே செல்வதும் பிறகு 30 நிமிடங்கள் கழித்து வெளியே வருவதும் பதிவாகியுள்ளது.

பெண் மருத்துவர் உடலின் வெளிப்புறத்தில் 16 காயங்களும், உள்புறத்தில் 9 காயங்களும் இருந்திருக்கிறது. மேலும், அவர் நகத்தில் இருந்த ரத்தம் மற்றும் திசுக்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அது சஞ்சய் ராய்யின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போகிறது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிபர்ன் தாஸ், இன்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பின்போது, தடயவியல் துறையின் ஆதாரங்களும், டி.என்.ஏ. மாதிரிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதியாகியுள்ளது என்று தெரிவித்து சஞ்சய் ராயை குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த பெண்.. நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது

மேலும், குற்றவாளிக்கான தண்டனை விவரம் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், அதிகப்பட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

First Published :

January 18, 2025 3:32 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி; தண்டனை விவரம் எப்போது?

Read More

Previous Post

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! – ஐபிசி தமிழ்

Next Post

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் கேப்டன், கில் துணை கேப்டன்! | India squad announced for Champions Trophy: Rohit captain, Gill vice-captain!

Next Post
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் கேப்டன், கில் துணை கேப்டன்! | India squad announced for Champions Trophy: Rohit captain, Gill vice-captain!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் கேப்டன், கில் துணை கேப்டன்! | India squad announced for Champions Trophy: Rohit captain, Gill vice-captain!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin