• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: நாளை முதல் பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் | Israeli cabinet approves Gaza hostage-ceasefire deal

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: நாளை முதல் பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ் | Israeli cabinet approves Gaza hostage-ceasefire deal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்: காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (ஞாயிறு) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது. இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது.

3 கட்டங்களாக.. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் இருக்கும். அப்போது ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். இவர்களில் பெண்கள், குழந்தைகள், ராணுவ வீரர்கள் அடங்குவர்.

அதேபோல் இஸ்ரேல் தரப்பு இந்த காலக்கட்டத்தில் 737 பாலஸ்தீனர்களை விடுவிக்கும். இதற்கான பட்டியல் தயாராகியுள்ளது. இந்தப் பட்டியலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன் அமைப்பின் முக்கியத் தலைவர் புஷ்ரா அல் தவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், ஃபதா இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ், இஸ்ரேல் விடுவிப்பு பட்டியல்கள் தயாராக இருந்தாலும் கூட இருதரப்பிலும் இந்த விடுவிப்பு நிகழ்வானது ஞாயிறு மாலை 4 மணி அளவில் நடக்கும் எனத் தெரிகிறது.

46,000+ பலி.. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிணைக் கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தம், போர் நிறுத்த ஒப்பந்தம் எல்லாம் கையெழுத்தானாலும் கூட காசாவில் இஸ்ரேல் தாக்குதல் ஓய்ந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 உடல்கள் வந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரர்… யார் இந்த பினோத் சவுத்ரி?

Next Post

பிறப்பை மறைத்து, பிறந்த குழந்தையை சேரஸ் மால் கழிவறையில் வீசிவிட்டு சென்றதாக ஜப்பானிய பெண் கைது | Makkal Osai

Next Post
பிறப்பை மறைத்து, பிறந்த குழந்தையை சேரஸ் மால் கழிவறையில் வீசிவிட்டு சென்றதாக ஜப்பானிய பெண் கைது | Makkal Osai

பிறப்பை மறைத்து, பிறந்த குழந்தையை சேரஸ் மால் கழிவறையில் வீசிவிட்டு சென்றதாக ஜப்பானிய பெண் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin