வாக்காளர் அடையாள அட்டை என்பது, இந்திய குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை அளிப்பதற்கான அடையாளச் சான்று ஆகும். வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அனைத்தும் அன்றைய நாள் வரையிலும் மேம்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் முகவரி மாறியிருந்தால் அதை நீங்கள் அட்டையிலும் அப்டேட் செய்திருக்க வேண்டும். பொதுவாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. தன் கணவரின் வசிப்பிட முகவரிக்கு தன்னுடைய முகவரியையும் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை பெண்களுக்கு உண்டாகிறது.
முன்பெல்லாம் இது சிரமமான காரியம் என்று கருதப்பட்ட நிலையில், இப்போதெல்லாம் இதை நீங்கள் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். அதேபோல பணி நிமித்தமாக வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து செல்லும் ஆண்களும் கூட தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை புதிய முகவரிக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
எப்படி செய்யலாம்
முதலில் உங்கள் புதிய முகவரி தொடர்பான ஸ்கேன் செய்யப்பட்ட ஆதாரம் உங்களிடத்தில் இருக்க வேண்டும். பெண்கள் இவ்வாறு செய்வதாக இருந்தால், அவர்களின் பெயரால் அல்லது அவர்களுடைய கணவரின் பெயருடன் கூடிய முகவரி சான்றை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு நீங்கள் சமர்ப்பிக்கும் புதிய முகவரிச் சான்றை ஆதாரமாக வைத்து வாக்காளர் அடையாள அட்டையில் உங்களுக்கான முகவரியை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க:
‘வெளிநாட்டிலும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது மோடி அரசு’ – அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சு
என்னென்ன ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்
1. தண்ணீர் இணைப்புக் கட்டண ரசீது, சமையல் எரிவாயு அல்லது மின் இணைப்பு ரசீது போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. ஆதார் அட்டையைப் பயன்படுத்தி முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
3. தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கு புத்தகம்.
4. இந்திய பாஸ்போர்ட்
5. வருவாய்த்துறை வழங்கியுள்ள நில உடைமை ஆதாரங்கள்.
6. வீடு வாடகை அல்லது ஒத்தி இருப்பதற்கான பதிவு செய்யப்பட்ட சான்று
7. இது மட்டுமல்லாமல், தேசிய வாக்காளர் சேவை தளத்தில், உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட அக்கவுண்ட் இருக்க வேண்டும்.
பெண்கள் முகவரியை மாற்றம் செய்வது எப்படி?
1. தேசிய வாக்காளர் சேவை தளத்தில் உள்நுழையவும்.
2. ஏற்கனவே உள்ள எலெக்டோரல் ரோல் டேப் உள்ளே சென்று முகவரி மாற்றம் செய்யலாம் அல்லது படிவம் 8ஐ பூர்த்தி செய்து அனுப்பலாம்.
3. Self என்பதை தேர்வு செய்து உங்கள் எபிக் நம்பரை டிஸ்பிளே செய்யவும்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
4. படிவம் 8ல் உங்கள் மாநிலம், மாவட்டம், சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத் தொகுதி போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் அப்லோடு செய்ய வேண்டும்.
5. நீங்கள் குறிப்பிட்ட விவரங்களை மீண்டும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
