• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களுடன் பழக்கம்..! அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டல்..! சிக்கிய டெல்லி இளைஞர்

GenevaTimes by GenevaTimes
January 16, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களுடன் பழக்கம்..! அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டல்..! சிக்கிய டெல்லி இளைஞர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 05, 2025 7:53 AM IST

பம்பிள், ஸ்னாப்சாட், வாட்ஸ் ஆப் ஆகிய செயலிகளில் போலி முகவரிகளை உருவாக்கி, அதில் தன்னை ஒரு அமெரிக்க மாடல் என கூறியுள்ளார்.

டெல்லி இளைஞர் கைது

டேட்டிங் செயலிகள் மூலம் 700 பெண்களுடன் பழகி டெல்லி இளைஞர் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டிங் செயலியில் பழகிய மாடலிங் துறையைச் சேர்ந்த ஒருவர், தனது அந்தரங்க படங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக டெல்லி பல்கலைக்கழக மாணவி, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி டெல்லி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, டெல்லி ஷகர்பூரைச் சேர்ந்த 23 வயதான பிபிஏ பட்டதாரி துஷார் பிஸ்த்-ஐ கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியதைக் கேட்டு போலீசாருக்கே தலை சுற்றிவிட்டது. அவரால் பாதிக்கப்பட்டது இந்த ஒரு மாணவி மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக 700 இளம்பெண்கள் என்பது அதிர வைத்தது.

இதையும் படிக்க: டெல்லி சட்டசபை தேர்தல் : கெஜ்ரிவாலுக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளர் இவர்தான்! யார் இந்த பர்வேஷ் வர்மா?

பம்பிள், ஸ்னாப்சாட், வாட்ஸ் ஆப் ஆகிய செயலிகளில் போலி முகவரிகளை உருவாக்கி, அதில் தன்னை ஒரு அமெரிக்க மாடல் என கவர்ச்சிகரமாகக் காட்டிய துஷார் பிஸ்த், இந்தியாவில் வரன் தேடுவதாகக் கூறி பழகியுள்ளார்.

18 வயது முதல் 30 வரை உள்ள பெண்களைக் குறிவைத்து தன் வலையில் வீழ்த்திய துஷார் பிஸ்த், அவர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துஷார் பிஸ்த்தின் செல்போனில் இருந்து ஏராளமான பெண்களின் படங்கள், அந்தரங்க வீடியோக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் இருந்து 13 கிரெடிட் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடக்கத்தில் நன்றாகப் பேசிய அவர், சில நாட்களுக்குப் பிறகு அந்தரங்கப் படங்களைக் கேட்டதாகவும், அதை வைத்து பின்னர் பிளாக் மெயிலில் ஈடுபட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் டெல்லியைச் சேர்ந்த ஷகர்பூர் என்ற இடத்தில் வசிப்பதாகவும், அவர் தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தாய் இல்லத்தரசியாகவும், சகோதரி குருகிராமில் பணிபுரிவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவரின் மொபைலிலிருந்து 40-க்கும் மேற்பட்ட பெண்களின் சேட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

First Published :

January 05, 2025 7:53 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களுடன் பழக்கம்..! அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டல்..! சிக்கிய டெல்லி இளைஞர்

Read More

Previous Post

அதிகரிக்கும் மழை ; வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

Next Post

தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனை | Chennai: Gold rate soars high

Next Post
தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனை | Chennai: Gold rate soars high

தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனை | Chennai: Gold rate soars high

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin