திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர்
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

