
Last Updated:
Arvind Kejriwal | கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா மீது வழக்கு தொடர டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையால் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைதாகி பின்னர் பிணையில் விடுதலையாகினர். அரசு ஊழியர் ஒருவரை முன் அனுமதி பெறாமல் பணமோசடி வழக்கில் கைது செய்ய முடியாது என்று கடந்த நவம்பர் 6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா மீது வழக்கு தொடர டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. அமலாக்கத்துறையின் கடிதத்துக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனாவும் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமும் வழக்கு தொடர இசைவு தெரிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
January 15, 2025 12:01 PM IST

