
Last Updated:
Minister Duraimurugan Delhi Visit | சென்னையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகனும், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனும் டெல்லி சென்றனர்.
தனது மகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் மகனும் திமுக எம்.பியுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான வீடு, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகனும், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனும் டெல்லி சென்றனர்.
அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இருப்பினும் அரசு முறைப் பயணமாக அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றாரா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றாரா என்ற தகவல் வெளியாகவில்லை.
January 05, 2025 8:59 AM IST
Minister Duraimurugan Delhi Visit | அமலாக்கத்துறை சோதனை : டெல்லிக்கு விரைந்த அமைச்சர் துரைமுருகன்… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

