டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடைகோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பிறகும், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் நீதிபதி கூறினார்
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு வாரண்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றுள்ளதால் பரபரப்பு நிலவியது. அமலாக்கத்துறை சம்மனுக்கு டெல்லி நீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், கெஜ்ரிவால் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். இதனையறிந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.
#WATCH
| AAP workers stage protest outside the residence of Delhi CM Arvind Kejriwal.
#WATCH | AAP workers stage protest outside the residence of Delhi CM Arvind Kejriwal.
Enforcement Directorate team is present at Arvind Kejriwal’s residence for questioning. pic.twitter.com/d13c09VGk7
— ANI (@ANI) March 21, 2024
நிலைமையை கருத்தில் கொண்டு, விரைவு அதிரடிப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Police detains AAP workers protesting outside the residence of Delhi CM Arvind Kejriwal.
Enforcement Directorate team is present at Arvind Kejriwal’s residence for questioning. pic.twitter.com/t2LbWGNAcX
— ANI (@ANI) March 21, 2024
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டின் முன்பு கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
