சபரிமலையில் இன்று மாலை (ஜன. 14) மகர ஜோதி தெரிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதி தெரிந்தபோது சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சன்னிதானம், பம்பை, பாண்டித்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
மகர விளக்கு பூஜையில் ஐயப்பனுக்கு பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

