• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Mahakumbh Mela | 12 ஆண்டுகளுக்கு பின் இன்று தொடங்கும் மகா கும்பமேளா.. உத்தரப்பிரதேசத்தில் கோலாகலம்!

GenevaTimes by GenevaTimes
January 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Mahakumbh Mela | 12 ஆண்டுகளுக்கு பின் இன்று தொடங்கும் மகா கும்பமேளா.. உத்தரப்பிரதேசத்தில் கோலாகலம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 13, 2025 3:17 PM IST

Mahakumbh Mela | ஹரித்வாரில் உள்ள ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா படா மடத்தை சேர்ந்த ரிஷிகள் மற்றும் மகான்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஒட்டகம் மற்றும் குதிரையில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

News18

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுவது மகா கும்பமேளா. உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சாதுக்களும், துறவிகளும், அகோரிகளும் வண்ணப்பொடிகளைத் தூவிக் கொண்டு, கழுத்தில் மண்டை ஓடு மாலையுடன் மந்திரங்கள் முழங்க தெருக்களில் உலா வந்தனர்.

ஹரித்வாரில் உள்ள ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா படா மடத்தை சேர்ந்த ரிஷிகள் மற்றும் மகான்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஒட்டகம் மற்றும் குதிரையில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பாவெல், மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற லாரன் பாவெல் சாமி தரிசனம் மேற்கொண்டார். இன்று கோலாகலமாக தொடங்கும் கும்பமேளா நிகழ்ச்சியிலும் லாரன் பாவெல் பங்கேற்கிறார்.

#WATCH | Prayagraj, Uttar Pradesh | Devotees take holy dip as #MahaKumbh2025 – a rare celestial alignment that occurs only once in 144 years – begins with the ‘Shahi Snan’ on the auspicious occasion of Paush Purnima, today pic.twitter.com/izEp24QZKE


— ANI (@ANI) January 12, 2025

இந்நிலையில், கும்பமேளாவில் கலந்துகொள்ள செல்லும் பக்தர்களுக்காக தற்காலிக குடில்களை அம்மாநில அரசு அமைத்துள்ளது. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி சிற்றுண்டி, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் மருத்துவ உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read | Assam Coal Mine Tragedy: 4 பேர் சடலமாக மீட்பு.. 5 பேர் நிலை என்ன? அசாம் எலிதுளை சுரங்கத்தில் மீட்பு பணி தாமதமாக காரணம் என்ன?

கங்கை, யமுனை மற்றும் கண்களுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில், புனித நீராடுதல் மற்றும் தானம் செய்வது இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்றதாகும். மேலும் மகாகும்பத்தின் போது ராஜ ஸ்நானம் செய்வதன் மூலம், புண்ணியம் கிடைப்பதுடன், மோட்சம் கிட்டும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் நிலவுகிறது.

இன்று தொடங்கும் மகா கும்பமேளா, பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

First Published :

January 13, 2025 9:25 AM IST



Read More

Previous Post

இலங்கையில் இயற்கையின் சீற்றம் : குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை

Next Post

பிசிசிஐ செயலராக தேவஜித் தேர்வு | Devajit saikia elected as BCCI secretary

Next Post
பிசிசிஐ செயலராக தேவஜித் தேர்வு | Devajit saikia elected as BCCI secretary

பிசிசிஐ செயலராக தேவஜித் தேர்வு | Devajit saikia elected as BCCI secretary

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin