இந்துத்துவா வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆரிய வைதிக பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியர்களின் முதல் கடமை! பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம். நமது உயிர் மூச்சான தமிழ் ஈழத்தையும், தலைவர் மேதகுவையும், தமிழை ஆட்சி மொழியாக வழிபாட்டுமொழியாக வழக்காடு மொழியாக, ஏற்றுக் கொள்கிறார்கள், இந்துத்துவா வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா? அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள், இந்துத்துவாதிகள் எதிர்க்கிறார்கள், தேசிய கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்கிறார்கள் இந்துத்துவாவாதிகள் தினிக் கிறார்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்எஸ்எஸ் பசாக தினிக்கிறது, பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள், திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும், தமிழர்களையையும் அழித்து வந்தது ஆரியம் தான் நாம் தமிழர் கட்சியை துவக்கியதும் அன்றைக்கு அரவனைத்தவர்களும் மார்க்சிய பெரியாரிய, அம்பேதகாரிஸ்ட்டுகள் தான், திராவிடத்தையையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல, ஆரியம்தான் தமிழனின் முதல் பகை அண்ணன் சீமானின் கருத்து ஆர்எஸ்எஸ்,பாசசுக, சங்கபரிவார் அமைப்புகளுங்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ் தேசியம் வெல்ல உதவாது.

