சட்ட செலவு…
அந்தப் பணத்தை மைக்கேல் கோஹன் தன்னுடைய பணத்தில் இருந்து எடுத்துகொடுத்திருக்கிறார். அதன் பிறகு, கோஹனுக்கு டிரம்ப் ‘தேர்தல் சட்ட செலவு’ என்று கூறி அந்தத் தொகையை வழங்கியுள்ளார்.
அமெரிக்க சட்டத்தின் படி, ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கொடுத்த காசு சட்ட ரீதியானது தான். ஆனால், டிரம்ப் ‘தேர்தல் செலவு’ என கோஹனுக்கு கொடுத்த பணத்தை பொய் கணக்கு காட்டியது மிகப்பெரிய தவறு.
2018-ல் இருந்து…
ஆக, இந்த வழக்கு தான் 2018-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை, டிரம்பை துரத்தி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க டிரம்ப் என்ன காரணம் கூறினாலும்…எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும், அதை ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதியாக மறுத்துவிட்டது. ஏன்…நேற்று வரை கூட, டிரம்ப் இந்த வழக்கை ரத்து செய்யக்கூறி கடுமையாக போராடினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
கடந்த ஆண்டு, ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டு அதிபர் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ளார். வரும் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம், அமெரிக்க உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தேதியில் டிரம்ப் நேரிலோ, ஆன்லைனிலோ ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அப்போது, நீதிமன்றம் டிரம்பிற்கு சிறை தண்டனை வழங்காது என்று தகவல்கள் பரவியது.
நீதிமன்றத்தின் உத்தரவின் படி, டிரம்ப் இன்று ஆன்லைனில் ஆஜரானார்.
