• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பலவீனமான பிரதமர் இந்திரா காந்தி: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கருத்து | Indira Gandhi was Weak pm says BJP MP Kangana Ranaut

GenevaTimes by GenevaTimes
January 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பலவீனமான பிரதமர் இந்திரா காந்தி: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கருத்து | Indira Gandhi was Weak pm says BJP MP Kangana Ranaut
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ‘‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சக்தி வாய்ந்தவராக இருந்தார் என நினைத்தேன். ஆனால், அவர் பலவீனமாக இருந்ததை எனது ஆய்வில் கண்டறிந்தேன்’’ என பாஜக எம்.பி.யும், எமர்ஜென்சி திரைப்படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் இருந்து பாஜக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. கடந்த 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமல்படுத்தப்பட்ட 21 மாத அவசரநிலை பற்றி இந்த படம் தெரிவிக்கிறது. இது வரும் 17-ம் தேதி வெளியாகிறது. இதில் நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இவர் தலைவி திரைப்படத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாகவும் நடித்தவர். இவர் ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ திரைப்படத்தில் ஜான்சி ராணியாகவும் நடித்தவர்.

இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பார். எமர்ஜென்சி திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட , ‘என்னை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு தகுதியான இயக்குனர்கள் தற்போது இல்லை’’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டியில் அவர் இந்திரா காந்தி பற்றி கூறியிருப்பதாவது:

எமர்ஜென்சி படத்துக்காக இந்திரா காந்தி பற்றி விரிவான ஆய்வுகளை நான் மேற்கொண்டேன். நான் அறிந்த விஷயங்கள் முற்றிலும் முரண்பாடாக இருந்தன. பலவீனமாக இருந்தால், அதிக கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என விரும்புவோம் என்ற எனது நம்பிக்கைக்கு இது வலு சேர்த்தது. இந்திரா காந்தி மிகவும் சக்திவாய்ந்த பிரதமர் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் பலவீனமாக இருந்தார். அவர் தன்னை பற்றியே உறுதிசெய்ய முடியாதவராக இருந்தார். இந்திரா காந்தி பலரைச் சார்ந்திருந்தார். அவர்களில் ஒருவர் சஞ்சய் காந்தி. எமர்ஜென்சி படத்துக்கு முன்பாக இந்திரா காந்தி மீது எனக்கு அவ்வளவு அனுதாபம் இல்லை.

எமர்ஜென்சி திரைப்படம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக நான் பல சவால்கள், பின்னடைவுகள் மற்றும் அழுத்தங்களை சந்தித்தேன். அந்த படத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களுக்கு நாங்கள் ஆதாரங்களை தாக்கல் செய்தோம். அந்தப் படத்தில் எதிர்ப்பு தெரிவிக்க எதுவும் இல்லை. இந்தப் படம் கடந்தாண்டு செப்டம்பர் 26-ம் தேதியே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் திரைப்பட வாரியத்தின் சான்று கிடைக்காததால் வெளியிட முடியவில்லை. பலர் இந்தப் படம் வெளியாவதை தடுக்க முயன்றனர். இதனால் நான் முற்றிலும் நொறுங்கி போனேன். எமர்ஜென்சி திரைப்படம் வழக்கத்துக்கு மாறான , சர்ச்சைக்குரிய திரைப்படம் தான். ஆனால், இந்தப் படம் வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதி பற்றி பேசுகிறது.

நான் நாடாளுமன்றத்தில் எம்.பி. பிரியங்காவை சந்தித்தேன். அவர் எனது பணியையும், எனது சிகை அலங்காரத்தையும் பாராட்டினார். எமர்ஜென்சி படத்தை பார்க்க வேண்டும் என அவரிடம் கூறினேன். அந்த படத்தில் உள்ள விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டு என்னை பாராட்டுவர் என நினைக்கிறேன்.

இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.



Read More

Previous Post

மின்கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களுக்கான இறுதி வாய்ப்பு

Next Post

நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை – ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா | Nawaz Mohammed s own goal Chennaiyin fc Odisha match drawn

Next Post
நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை – ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா | Nawaz Mohammed s own goal Chennaiyin fc Odisha match drawn

நவாஷ் முகமதுவின் சுய கோல்: சென்னை - ஒடிசா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா | Nawaz Mohammed s own goal Chennaiyin fc Odisha match drawn

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin