• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வெளிநாடுவாழ இந்தியர்கள் இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வேண்டும்: ஜெய்சங்கர் வேண்டுகோள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வெளிநாடுவாழ இந்தியர்கள் இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வேண்டும்: ஜெய்சங்கர் வேண்டுகோள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவை உலக அளவில் சுற்றுலாவுக்கான மையமாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

18வது வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடான பிரவாசி பாரதிய திவஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் புதன்கிழமை தொடங்கியது.

இம்மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய ஜெய்சங்கர், இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வெளிநாடுவாழ் இளம் இந்தியர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

“வெளிநாடுவாழ் இந்தியர்கள், தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள இளம் நண்பர்களை அழைத்து வர வேண்டும். அவர்கள், நமது தனித்துவமான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை ஆராய வேண்டும். இது நிச்சயமாக வாழ்நாள் பழக்கமாக மாறும்,” என்று ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார்.

தூய்மை இந்தியா, பெண் குழந்தைக்கான கல்வி, இலவச உணவுப் பொருள்கள் விநியோகம், முத்ரா, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி வழங்கும் திட்டம், வயதானவர்களுக்கான மருத்துவக் காப்பீடு, குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவை மாற்றியமைக்கும் முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டங்களை முழுமையாக ஆராய்ந்தால் இந்திய இளையர்களின் எதிர்காலத்தை இந்திய அரசு எப்படிப் பாதுகாக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா தொற்றுப் பரவல் சமயத்தில் குறிப்பிடத்தக்க அளவு பின்னடைவைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட ஒரு நாடு, முழு உலகிற்கும் தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்கியது என்றார்.

சந்திரயான்-3 தரையிறக்கம், ஆதித்யா எல்1 ஆய்வகம், முன்மொழியப்பட்ட ககன்யான் பணி ஆகியவை இந்தியாவுக்கு சக்திவாய்ந்த உத்வேகங்களை அளித்துள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.



Read More

Previous Post

‘உயிர் பிழைச்சதே பெருசு…’ – லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள் | Harrowing escapes from Los Angeles wildfires were made by foot, by car or by grace of strangers

Next Post

Tamilmirror Online || உரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை-பிரதமர்

Next Post
Tamilmirror Online || உரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை-பிரதமர்

Tamilmirror Online || உரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை-பிரதமர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin