இந்த நிலையில், கேள்வி – பதில் நேரம் நடைபெற்ற போது, உறுப்பினர்களின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். இதற்கிடையில், அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியபோது நேரலையில் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கருப்புச் சட்டையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் நேரலையில் காட்டப்படவில்லை. அமைச்சர்கள் பேசும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பும்போது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அவர் பேசிய குரல் மட்டும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

