• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கனடா பிரதமர் பதவி ரேஸில் முந்தும் அனிதா ஆனந்த் யார்? | who is Anita Anand one of the contenders in Canada pm race

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
கனடா பிரதமர் பதவி ரேஸில் முந்தும் அனிதா ஆனந்த் யார்? | who is Anita Anand one of the contenders in Canada pm race
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அந்தக் கட்சி முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக லிபரல் கட்சி தொண்டர்களிடையே விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார். இப்போதைய சூழலில் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும் லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். இவரது தந்தை ஆனந்த், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர்.

யார் இந்த அனிதா ஆனந்த்? – ட்ரூடோ பதவி விலகி நிலையில், அடுத்த கனடா அதிபர் ஆகும் ரேஸில் ஐந்து பேர் முன்னிலையில் உள்ளனர். அதில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்தும் உள்ளார். 57 வயதான அவர், தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இதற்கு முன்பு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த 2019-ல் அவர் அரசியலில் என்ட்ரி கொடுத்தார். அப்போது முதலே அவர் லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக உள்ளார்.

குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸில் இளங்கலை முடித்துள்ளார். ஆக்ஸ்போர்டு மற்றும் டல்ஹவுசி பல்கலைக்கழகங்களில் இளங்கலை சட்டம் பயின்றவர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நோவா ஸ்கோடியாவின் கென்ட்வில்லில் அவர் பிறந்தார். அவரது பெற்றோர் எஸ்.வி.ஆனந்த் – சரோஜ் டி. ராம் என இருவரும் மருத்துவர்கள். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

அரசியல் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை வழங்கி உள்ளார். பொது சேவைத் துறை அமைச்சராக இருந்தபோது கரோனா தடுப்பூசிகளை உறுதி செய்த செயலுக்காக மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றவர். அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போதுதான் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனை ஆதரிப்பது என்ற முடிவை கனடா எடுத்தது.

அமைச்சரவை மாற்றத்தின்போது அவர் கருவூல வாரிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் கேபினட் அளவில் முக்கியஸ்தராக இருந்தார். கடந்த டிசம்பரில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த லிபரல் கட்சியின் மூத்த தலைவர் ஜார்ஜ் சாஹலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார். இவர்கள் தவிர லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் மெலானி ஜோலி, கிறிஸ்டி கிளார்க், மார்க் கார்னி, கிறிஸ்டியா பிரீலேண்ட், டோமினிக் லீபிளாங்க் ஆகியோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

வரும் 27-ம் தேதி கனடா நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது ஆளும் லிபரல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கன்சர்வேட்டிவ் கட்சி திட்டமிட்டு உள்ளது. இதன்படி வரும் மார்ச் மாதம் கனடா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இப்போதைய நிலையில் ஆளும் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “நம்பிக்கை வாக்கெடுப்பில் லிபரல் கட்சியின் ஆட்சி கவிழுமா அல்லது அந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்குமா என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை. அரசு கவிழ்ந்து உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் அல்லது லிபரல் கட்சியின் புதிய பிரதமர் பதவியேற்று வரும் அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம்” என்று தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

‘ரோகித், கோலியின் சாதனைகளை மறந்து விட்டார்கள்’ – விமர்சனங்களுக்கு யுவராஜ் சிங் பதிலடி

Next Post

பொது போக்குவரத்துக்கு சிறப்பு மின் கட்டணத்தை அமைச்சகம் முன்மொழிகிறது – Malaysiakini

Next Post
பொது போக்குவரத்துக்கு சிறப்பு மின் கட்டணத்தை அமைச்சகம் முன்மொழிகிறது – Malaysiakini

பொது போக்குவரத்துக்கு சிறப்பு மின் கட்டணத்தை அமைச்சகம் முன்மொழிகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin