• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இனி அனைத்து பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அல்ல… ரூ.2500.. உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் வாக்குறுதியை வெளியிட்ட டெல்லி காங்கிரஸ்!

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இனி அனைத்து பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அல்ல… ரூ.2500.. உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் வாக்குறுதியை வெளியிட்ட டெல்லி காங்கிரஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தமிழகத்தில் தான் முதன்முதலில் பெண்களுக்கு மாதம் மாதம் பணம் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, மாதம் ரூ.1000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தமிழகத்தைப் பார்த்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தைப் பின்பற்றின. இதனால், இந்தியா முழுவதும் இந்த திட்டம் பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. இரண்டிலுமே ஆளுங்கட்சிகள் வெற்றிபெற்றன.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கூட்டணியும் ஆட்சியைத் தக்கவைத்தன. இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது பெண் வாக்காளர்களின் வாக்குகள் தான். தமிழகத்தில் இருப்பது போல் மகளிர் உரிமைத் தொகை இந்த இரண்டு மாநிலங்களிலும் வழங்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிராவில் ‘லட்கி பெஹன் யோஜனா’ என்கிற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இத்திட்டத்தில் 2.5 கோடி பெண்களுக்குத் தேர்தல் வரை தலா ரூ.1,500 வீதம் ஐந்து தவணையாக வழங்கப்பட்டது. மேலும் இது விரிவுப்படுத்தப்பட்டு, ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும் என மகாயுதி கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதிகள் வாக்குகளாக மாற, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை விட, தற்போது 53 லட்சம் பெண்கள் அதாவது 6 சதவிகிதம் பேர் கூடுதலாக ஆளும் கட்சிக்கு வாக்களித்தனர்.

இப்படி, ஆட்சி அதிகாரத்திற்கும் மகளிர் உதவித் தொகை திட்டங்கள் உதவுவதால் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களிலும் மகளிர் உதவித் தொகையில் வழங்கப்படும் தொகை அதிகரித்து அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி, அங்கும் பெண்களின் வாக்குகளை கவர மகளிர் உதவித் தொகை திட்டத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது. தற்போது சட்டசபைத் தேர்தல் அறிவிப்பையொட்டி அந்த தொகையை ரூ.2100 ஆக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.

Also Read | தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள்; தடுக்கும் வழி என்ன? – மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தற்போது காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. அதன்படி, டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் அன்புச்சகோதரி திட்டமாக மகளிர் உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டு மாதம் ரூ.2500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அதிரடியாக அறிவித்துள்ளது. டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால், மகளிர் உதவித் தொகை திட்டத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 07, 2025 12:15 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இனி அனைத்து பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 அல்ல… ரூ.2500.. உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் வாக்குறுதியை வெளியிட்ட டெல்லி காங்கிரஸ்!

Read More

Previous Post

நடிகை ஹனிரோஸ் தொடர்பில் ஆபாச கருத்து: 27 பேர் மீது வழக்குப்பதிவு

Next Post

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமனம் | Smriti Mandhana appointed to lead Indian women cricket team Ireland odi series

Next Post
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமனம் | Smriti Mandhana appointed to lead Indian women cricket team Ireland odi series

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமனம் | Smriti Mandhana appointed to lead Indian women cricket team Ireland odi series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin